புளியந்துறை ஊராட்சிமன்ற செயலாளர் பணியிடை நீக்கம் - கலெக்டர் உத்தரவு...!

புளியந்துறை ஊராட்சிமன்ற செயலாளரை பணியிடை நீக்கம் செய்து மயிலாடுதுறை கலெக்டர் லலிதா உத்தரவிட்டு உள்ளார்.
புளியந்துறை ஊராட்சிமன்ற செயலாளர் பணியிடை நீக்கம் - கலெக்டர் உத்தரவு...!
Published on

கொள்ளிடம்,

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த புளியந்துறை, காட்டூர், மகேந்திரப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் இன்று மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் சென்று அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் அரசு கான்கிரீட் வீடுகள், வாய்க்கால்களில் கதவணை கட்டும் பணி உள்ளிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது புளியந்துறை ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு சென்ற கலெக்டர் லலிதா அங்கு வைக்கப்பட்டுள்ள பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில் ஊராட்சி கணக்கு பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து புளியந்துறை ஊராட்சிமன்ற செயலாளராக பணியாற்றி வரும் சண்முகம்(வயது 47) என்பவரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com