கவுரவ விரிவுரையாளர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கவில்லை - உயர்கல்விதுறை முதன்மை செயலாளர் விளக்கம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
கவுரவ விரிவுரையாளர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கவில்லை - உயர்கல்விதுறை முதன்மை செயலாளர் விளக்கம்
Published on

சென்னை,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

அரசாணை நிலை எண் 56-ஐ பின்பற்றி கவுரவ விவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கல்லூரி பேராசிரியர் பணி நியமனத்தில் நேர்காணல் முறையினை தொடர்ந்து பின்பற்றவும், எழுத்து தேர்வு முறையினை கைவிட வேண்டும் உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர அவர்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை கைவிடாத கவுரவ விரிவுரையாளர்களை பணியில் இருந்து நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் போராட்டத்தை கைவிடாத கவுரவ விரிவுரையாளர்களை பணியில் இருந்து நீக்கம் செய்ய எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். பணியில் இருந்து நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துளளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com