நெகிழி கழிவுகளை அகற்றும் பணி

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் நெகிழி கழிவுகளை அகற்றும் பணி நடந்தது.
நெகிழி கழிவுகளை அகற்றும் பணி
Published on

வெள்ளியணை ஊராட்சியில் நேற்று ஊராட்சி பகுதியில் சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுப்புறச் சூழலை உருவாக்கும் பொருட்டு தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் நெகிழி கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்றது. இப்பணியை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாகன நகர்வுகளை கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வடக்கு ஆதிதிராவிடர் காலனியில் ரூ.9.52 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாக கட்டிடத்தை பார்வையிட்டு பயன்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் வெள்ளியணை ஊராட்சி தேவேந்திரன் நகர் பகுதியில் 122 வீடுகள் உள்ளன. இதில் குறைந்த அளவே கழிவறைகளை பயன்படுத்துவது தெரிய வந்தது, அந்த பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் கழிவறை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பொதுமக்களாகிய நீங்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும் அதற்காக தனி நபர் கழிவறைகள் மற்றும் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியே ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் கட்டிக் கொடுக்கப்படும்.

மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை நாள்தோறும் பிரித்து குப்பைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும், மேலும் கழிவு நீர் மேலாண்மைக்காக தேவைப்படும் வீடுகளுக்கு உறிஞ்சு குழிகள் அமைத்துக் கொடுக்கப்படும், என கலெக்டர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com