சிறப்பு மனு முகாமில் 41 மனுக்களுக்கு தீர்வு

சிறப்பு மனு முகாமில் 41 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
சிறப்பு மனு முகாமில் 41 மனுக்களுக்கு தீர்வு
Published on

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் மங்களமேடு உட்கோட்டத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மங்களமேடு உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன் தலைமை தாங்கினார். முகாமில் இன்ஸ்பெக்டர்கள்(குன்னம்) சந்திரசேகர், (மங்களமேடு) நடராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுவை பெற்றனர். முகாமில் மொத்தம் 47 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 41 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com