முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: ஆக., 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: ஆக., 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

புதுக்கோட்டை,

புதுக்​கோட்டை மாவட்​டம் விராலிமலை சட்​டமன்ற தொகு​தி​யில் வெற்றி பெற்ற முன்​னாள் அமைச்​சர் சி.​விஜய​பாஸ்​கர், 2016-ல் இருந்து 2021 வரை அமைச்​ச​ராக இருந்த காலக்​கட்​டத்​தில் தனது மனைவி ரம்யா பெயரிலும், தனது பெயரிலும் வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்​த​தாக, புதுக்​கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்பு பிரிவு போலீ​சார் கடந்த 2021-ல் வழக்​குப் பதிவு செய்​தனர்.

மறு​நாள் விஜய​பாஸ்​கருக்கு சொந்​த​மான வீடு, கல்​கு​வாரி, அலு​வல​கம் உள்பட தமிழகம் முழு​வதும் 56 இடங்​களில் ஊழல் தடுப்பு போலீ​சார் சோதனை நடத்​தினர். இந்த வழக்கு புதுக்​கோட்டை மாவட்ட முதன்மை நீதி​மன்​றத்​தில் விசா​ரிக்​கப்​பட்டு வந்​தது. வழக்கு விசா​ரணை​யின்​போது, விஜய​பாஸ்​கர், ரம்யா ஆகியோர் அவ்​வப்​போது நீதி​மன்​றத்​தில் ஆஜராகி வந்​தனர்.

இதன்படி சி.விஜயபாஸ்கர் மற்றும் அவர் மனைவி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், இன்றைக்கு வழக்கு விசாரணையில் இருவரும் ஆஜராகவில்லை. இதனை அடுத்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com