டாஸ்மாக் பாரில் தகராறு: பீர்பாட்டிலால் தாக்கப்பட்ட ரவுடி உயிரிழப்பு

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
டாஸ்மாக் பாரில் தகராறு: பீர்பாட்டிலால் தாக்கப்பட்ட ரவுடி உயிரிழப்பு
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 32). இவர் மீது திருட்டு உள்பட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளதாகவும், ரவுடி பட்டியலில் பெயர் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவர் விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.என். நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்த சென்றார்.

அங்கு ஏற்கனவே மது அருந்தி கொண்டிருந்த அல்லம்பட்டியை சேர்ந்த அருண்குமார் (31), சின்ன பேராலியை சேர்ந்த விஜயபிரபு (44) ஆகியோரிடம் பணம் கேட்டு சுப்புராஜ் தகாத வார்த்தைகளால் திட்டி, பாட்டிலால் தாக்கி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 2 பேரும் பாரில் இருந்து வெளியே வந்து சுப்புராஜை பீர்பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சுப்புராஜ் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விருதுநகர் ஊரக போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து அருண்குமார், விஜயபிரபு ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com