கோவில் விழாவில் தகராறு; 9 பேர் மீது வழக்கு

கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 9 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது
கோவில் விழாவில் தகராறு; 9 பேர் மீது வழக்கு
Published on

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை கிராமத்தில் உள்ள சந்திவீரன் கோவிலில் எருது கட்டு விழாவை முன்னிட்டு கொடிவலைதல் விழா நடைபெற்றது. இத்திருவிழாவில் முதல் மரியாதை வழங்குவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையிலான போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலரை எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்நிலையில் இது தொடர்பாக மல்லாக்கோட்டை முத்துகிருஷ்ணன், அமலநாதன், ஜெயபாலன், சத்தியமூர்த்தி, பாலசுந்தரம், அருணாச்சலம் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com