

மதுரை கீழசந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 68). அங்குள்ள கோவில் ஒன்றின் விழா கமிட்டி உறுப்பினராக உள்ளார். அந்த கோவில் திருவிழா நடந்து வரும் நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்ராஜ்குமார் (49), அவரது மகன் சுதர்சன் (23) பக்தர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதை உதயகுமார் கண்டித்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த இருவரும் அவரை ஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்ராஜ்குமார், சுதர்சன் ஆகியோரை கைது செய்தனர்.