நாய் குரைத்ததில் தகராறு:தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது

நாய் குரைத்ததில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
நாய் குரைத்ததில் தகராறு:தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது
Published on

ஆரல்வாய்மொழி:

தாழக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் சூரியன் (வயது 65). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வேலாயுத பெருமாள் மகன் கார்த்திக் (19) என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய் குரைத்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில் சூரியன் தாழக்குடி சந்திப்பில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது அங்கு கார்த்திக் வந்தார்.

அப்போது சூரியனை ஆபாசமாக பேசிய அவர் திடீரென கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த சூரியன் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குபதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com