விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாக குழு கலைப்பு !

விதிகளுக்கு மாறாக மேலாளர் உள்ளிட்ட 25 முறைகேடான நியமனங்களால், விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாக குழு கலைக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாக குழு கலைப்பு !
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட ஆவின் நிறுவனம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்திற்கு கடந்த 2018ல் தலைவர், துணைத்தலைவர், உள்ளிட்ட 17 உறுப்பினர்களை கொண்ட நிர்வாகக்குழு தேர்வுசெய்யப்பட்டது.

இந்த நிர்வாகக்குழு கடந்த 2021-22ல் விருதுநகர் மாவட்ட ஆவின் நிறுவனத்திற்கு மேலாளர், விற்பனை மேலாளர், பொறியாளர் உள்ளிட்ட 25 பணியிடங்கள் நிரப்பப்பட்டது.

ஆவினில் புதிய பணியிடங்கள் நிரப்பப்பட்டது கூட்டுறவு சங்க விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற புகார் எழுந்த நிலையில், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என பால்வளத்துறை ஆணையர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், விதிகளுக்கு மாறாக 25 பணியிடங்கள் தேர்வுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடந்த டிசம்பரில் அனைத்து பணியிடங்களையும் ரத்துசெய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாகக்குழுவை மொத்தமாக கலைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர் முழு பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com