குடும்ப பிரச்சினையில் மனமுடைந்தடிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் குடும்ப பிரச்சினையில் மனமுடைந்த டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடும்ப பிரச்சினையில் மனமுடைந்தடிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
Published on

தூத்துக்குடி பெரியசாமிநகர் பாலம் பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவருடைய மகன் கருப்பசாமி (வயது 37). டிரைவர். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் கோயில்பிள்ளை நகரில் பழைய மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த தெர்மல்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரு உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com