

சென்னை,
சென்னை டிரஸ்ட்புரத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமினை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் ஆகியவற்றை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக முககவசம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்திருக்கிறார். அதையடுத்து முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி ஆகஸ்டு 1, 3 மற்றும் 4-ந்தேதிகளில் இலவச முககவசம் பெறுவதற்காக வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்படும்.
மேலும் ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் அத்தியாவசிய பொருட்கள் உடன் இலவச முககவசங்களையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.