குற்றால அருவி நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு

குற்றாலத்தில் உள்ள பழைய அருவி மற்றும் மெயின் அருவிகளின் நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குற்றால அருவி நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு
Published on

தென்காசி,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையில் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது குளித்த சிறுவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். 500 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்ட அவனது உடல் மீட்கப்பட்டது. குற்றாலத்திற்கு குளிக்க சென்ற போது வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்படுத்தியது.

இந்த நிலையில், குற்றாலத்தில் உள்ள பழைய அருவி மற்றும் மெயின் அருவி ஆகிய இரு அருவிகளை வனத்துறை கட்டுப்பாட்டில் விட தென்காசி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஐந்தருவி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஏனைய இரு அருவிகளையும் தற்போது வனத்துறை நிர்வாகத்தின் கீழ் விட பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com