மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா
Published on

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான ஆர்.காந்தி, ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு, கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட துணை செயலாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி துணைசெயலாளர் ஆர்.வினோத்காந்தி, ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர், சேஷாவெங்கட், ராணிப்பேட்டை நகர பொறுப்பாளர் பூங்காவனம் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், தி.மு.க. வினர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும், ராணிப்பேட்டை நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் அமைச்சர் காந்தி, ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும் 'என் குப்பை, என் பொறுப்பு' என்ற தூய்மை விழிப்புணர்வு ஊர்வலத்தை ராணிப்பேட்டை நகராட்சியில் இருந்து அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று முத்துக்கடையில் முடிவடைந்தது. இதில் ராணிப்பேட்டை நகர மன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், மற்றும் அப்துல்லா, கிருஷ்ணன், ஏர்டெல் குமார் உள்ளிட்ட நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், மாணவ, மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com