மாவட்ட மின்னொளி கபடி போட்டி

ஏரல் அருகே மாவட்ட மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.
மாவட்ட மின்னொளி கபடி போட்டி
Published on

ஏரல்:

ஏரல் அருகே உள்ள கண்ணான்டிவிளையில் பெரிய முத்தம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான 3-வது ஆண்டு மின்னொளி கபடி போட்டி நடந்தது. இதில் 40 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் முதலிடம் வெற்றி பெற்ற பண்ணவிளை அணிக்கு வெற்றி சுழல் கோப்பையை மற்றும் ரூ.29 ஆயிரம் பரிசை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் சார்பில் வழங்கப்பட்டது.

2-வது இடம் பெற்ற கண்ணான்டிவிளை காமராஜ் கபடி அணிக்கு சுழல் கோப்பை மற்றும் ரூ.17 ஆயிரம் பரிசினை தூத்துக்குடி தொழிலதிபர் குணசேகரன் வழங்கினார். 3-வது இடம் பெற்ற பண்டாரவிளை மேசியா அணிக்கு ரூ.12 ஆயிரம் பரிசை பெருங்குளம் பேரூராட்சி கவுன்சிலர் பொன் செல்வராஜ் வழங்கினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கண்ணான்டிவிளை காமராஜ் கபடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். வெற்றி பெற்ற அணிகள் பண்டாரவிளையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com