கரூர் மாவட்டத்தில் வட்டார அளவிலான செஸ் போட்டி

கரூர் மாவட்டத்தில் நடந்த வட்டார அளவிலான செஸ் போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கரூர் மாவட்டத்தில் வட்டார அளவிலான செஸ் போட்டி
Published on

செஸ் போட்டி

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டி நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் செஸ் போட்டி 6,7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும், அதேபோல் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.

வட்டார அளவில்...

அதனை தொடர்ந்து பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வட்டார அளவில் போட்டிகள் கரூர் மற்றும் தாந்தோன்றிமலை வட்டாரத்திற்கு கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்டாரத்திற்கு புலியூர் ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், க.பரமத்தி மற்றும் அரவக்குறிச்சி வட்டாரத்திற்கு அரவக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், குளித்தலை மற்றும் தோகைமலை வட்டாரத்திற்கு மவுண்ட் கீரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் செஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.

மாணவ-மாணவிகள் பங்கேற்பு

இந்த போட்டியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வட்டார அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு வருகிற 25-ந்தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று முதலிடத்தை பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com