மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
Published on

திண்டுக்கல் ராயல்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் நடந்தது. இதில் 24 அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டிகளை திண்டுக்கல் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் பிலால் உசேன், வடக்கு மண்டல தலைவர் ஆனந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாக்-அவுட் சுற்று அடிப்படையில் போட்டிகள் நடந்தது. இதில் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. கிரிக்கெட் கிளப் அணி முதலிடமும், வடமதுரை நாட் அவுட் லெவன்ஸ் அணி 2-வது இடத்தையும், எம்.பி.ஆர். போர்ஸ் அணி 3-வது இடத்தையும் பிடித்தன. பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி பங்கேற்று பரிசு வழங்கி பேசினார். முதலிடம் பிடித்த அணிக்கு ரொக்கப்பரிசு ரூ.20 ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.15 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com