மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 22-ந் தேதி நடக்கிறது.
மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
Published on

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் வேளாண்துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.

எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்தும் தனிநபர் குறைகள் குறித்த மனுக்கள் அளித்தும் பயன்பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com