பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கராத்தே பயிற்சி

பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கராத்தே பயிற்சி
Published on

சர்வதேச சோரிசா சோட்டாகான் கராத்தே பெடரேஷன் சார்பில் மதுரை மாவட்ட அளவிலான ஒரு நாள் கராத்தே பயிற்சி வகுப்பு மற்றும் கலர் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரையில் உள்ள ரைட்வே இஸ்லாமிக் பள்ளியில் நடந்த இந்த போட்டியில் சோரிசா சோட்டோகான் கராத்தே தலைவர் விக்டர் குழந்தைராஜ் கராத்தே வீரர்களுக்கு பயிற்சி அளித்தார். பின்னர் பயிற்சியில் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கராத்தே மாஸ்டர்கள் கலியமூர்த்தி, செல்வ குமார், துணை பயிற்சியாளர் இப்ராகிம் மூசா, பள்ளி தாளாளர் அப்துல் அஜீஸ் மற்றும் ரைட்வே பள்ளியின் முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட பயிற்சியாளர் மாஸ்டர் ஷேக் அப்துல்லா செய்திருந்தார். பயிற்சி வகுப்பில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com