மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி

விருதுநகரில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.
மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி
Published on

விருதுநகர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் ஸ்ரீவித்யா மெட்ரிக் பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. ஸ்ரீ வித்யா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த போட்டியை இந்தியா கல்வி குழும நிறுவனர் திருவேங்கட ராமானுஜம் தொடங்கி வைத்தார். தொழிலதிபர் கோகுலம் தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் 5 பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் 25 பயிற்சிப்பள்ளிகளில் இருந்து 450 பேர் கலந்து கொண்டனர். 3 வகையான போட்டிகளில் தனித்திறன் காட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சிலம்பாட்ட கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com