கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
Published on

விழுப்புரம் மாவட்டத்தில் கோட்ட அளவிலான மாதாந்திர மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் அந்தந்த கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது. அதன்படி விழுப்புரம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதியும், கண்டமங்கலம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் 12-ந் தேதியும், செஞ்சி கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் 19-ந் தேதியும், திண்டிவனம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் 26-ந் தேதியும் நடக்கிறது.

எனவே மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இக்கூட்டத்தில் நேரில் கலந்துகொண்டு தங்களின் குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறலாம். மேலும் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறும் அன்று அரசு விடுமுறை நாளாக இருப்பின் விடுமுறைக்கு அடுத்து வரும் வேலை நாளன்று கூட்டம் நடைபெறும் என மின்வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com