மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

தி.மு.க. இளைஞரணி சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
Published on

பனைக்குளம்.

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பாக கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தடகள போட்டியை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு உள்பட விளையாட்டுத்துறையினர் முன்னிலை வகித்தனர். இதைத் தொடர்ந்து இப்போட்டியில் ஏராளமான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மண்டபம் சம்பத் ராஜா தலைமையில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கோபிநாத், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் ரமேஷ், கண்ணா, சன் சம்பத்குமார், தவ்பீக் அலி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் உதயசூரியா உள்பட ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com