மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டி

மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் தொடங்கியது
மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டி
Published on

பாரதியார் தினம், குடியரசு தின விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட அளவிலான 14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குழு விளையாட்டு போட்டிகள் எளம்பலூர் இந்திரா நகரில் உள்ள தந்தை ரோவர் உயர்நிலைப்பள்ளியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மாணவிகளுக்கு வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, பூப்பந்தாட்டம், டென்னிஸ், கபடி ஆகிய குழு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் ஏற்கனவே பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய குறு வட்ட அளவில் நடத்தப்பட்ட மேற்கண்ட குழு விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த அணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளின் வீராங்கனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்த அணிகள் மாநில அளவிலான குழு விளையாட்டு போட்டிகளில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே பள்ளியில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் 14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட மாணவர்களுக்கு வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, பூப்பந்தாட்டம், டென்னிஸ், கபடி ஆகிய குழு விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com