மாவட்ட அளவில் இளையோருக்கான தடகள போட்டி

மாவட்ட அளவில் இளையோருக்கான தடகள போட்டி நடைபெற்றது. இதனை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
மாவட்ட அளவில் இளையோருக்கான தடகள போட்டி
Published on

புதுக்கோட்டையில் மாவட்ட அளவில் இளையோருக்கான தடகள போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் போட்டியை தொடங்கி வைத்து வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். புதுக்கோட்டை மாவட்ட தடகள சங்க தலைவர் அப்துல்லா எம்.பி. தலைமை தாங்கி பேசினார். இதையடுத்து, 8 முதல் 20 வயதிற்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. இதில் ஓட்டப்பந்தயம், தடைகளை தாண்டி ஓடுதல், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் இன்றும் (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் நவம்பர் மாதம் நாமக்கல்லில் நடைபெற உள்ள மாநில அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க உள்ளனர். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com