பட்டாசு கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

காட்பாடி பகுதி பட்டாசு கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
பட்டாசு கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
Published on

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காட்பாடி தாலுகாவில் அரும்பருத்தி, சேவூர் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள பட்டாசு கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது பட்டாசு கடைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சோதனை நடத்தினார்.

ஆய்வின் போது காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com