திருநெல்வேலி பேரிடர் மீட்பு குழுவினரின் உபகரணங்களை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் ஆய்வு

தென்மேற்கு பருவமழை காலங்களில் மீட்பு குழுவினர் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்தார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து பேரிடர் மீட்பு குழுவினரின் உபகரணங்களை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தென்மேற்கு பருவமழை காலங்களில் மீட்பு குழுவினர் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களின் உயிரையும் உடைமைகளையும் காப்பதில் முக்கியத்துவம் கொடுத்து செயலாற்ற வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்வின் போது திருநெல்வேலி ஆயுதப்படை டி.எஸ்.பி. சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story






