இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
Published on

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் பின்வரும் மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் விபரம்:

இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர்.

லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திருவள்ளூர், நாமக்கல், புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com