சசிகலாவுடன் தனது கட்சியை வரும் 12ம் தேதி இணைக்கிறார் திவாகரன்

திவாகரன், தனது கட்சியை வரும் 12ம் தேதி சசிகலாவுடன் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால், ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணி தனித்தனியாக பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, நான்தான் அதிமுக பொதுச்செயலாளர் என்றும், விரைவில் தலைமை கழகத்தை கைப்பற்றுவேன் என்றும் கூறி வருகிறார்.

இந்த நிலையில், திவாகரன், தனது கட்சியை வரும் 12ம் தேதி சசிகலாவுடன் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக சசிகலா சார்பில் வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது,

"சின்னம்மா அவர்களின் சீரிய தலைமையில் தாய் கழகமான அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தோடு, அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் விழா வரும் 12-ந் தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணிக் தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழகத்தொண்டர்கள் மற்று பொதுமக்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com