கருத்து வேறுபாட்டால் பிரிந்தகணவர்... கேமரா பொருத்தி கண்காணிப்பு.... போலீசில் பெண் என்ஜினீயர் புகார்

சென்னை வளசரவாக்கத்தில் கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவர் கேமரா பொருத்தி கண்காணிப்பதாக போலீசில் பெண் என்ஜினீயர் போலீசில் புகார் அளித்தார்.
கருத்து வேறுபாட்டால் பிரிந்தகணவர்... கேமரா பொருத்தி கண்காணிப்பு.... போலீசில் பெண் என்ஜினீயர் புகார்
Published on

சென்னை வளசரவாக்கம், ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் சந்தியா (வயது 34). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், வளசரவாக்கம் அனைத்து ள்மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

நான், 2011-ம் ஆண்டு வடபழனியை சேர்ந்த சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகு சஞ்சய் அவரது தோழியுடன் நெருங்கி பழகியதால் எங்களுக்குள் ஏற்பட்ட தகராறு மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். தற்போது நான் எனது தாய் வீட்டில் வசித்து வருகிறேன். இந்தநிலையில் சஞ்சய், எனது வீட்டின் எதிர்புறம் கண்காணிப்பு கேமராவை பொருத்தியும், எனது வாகனத்தில் ஜி.பி.ஆர்.எஸ். கருவியை பொருத்தியும் என்னை கண்காணிப்பதோடு, அவரது அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களை அனுப்பி என்னை மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதுபற்றி வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com