அரசு விரைவு பஸ்களில் தீபாவளி முன்பதிவு இன்று தொடக்கம்

அரசு விரைவு பஸ்களில் தீபாவளி முன்பதிவு இன்று தொடங்குகிறது
அரசு விரைவு பஸ்களில் தீபாவளி முன்பதிவு இன்று தொடக்கம்
Published on

சென்னை,

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளியை கொண்டாட பயணத்தை திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் தீபாவளி முன்பதிவு இன்று தொடங்குகிறது. 30 நாட்களுக்கு முன்னதாக அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு செய்யக் கூடிய வசதி உள்ளது. அதன்படி அக்டோபர் 22-ந்தேதி பயணம் செய்ய இன்று முன்பதிவு தொடங்குகிறது. www.tnstc.com என்ற இணைய தளம் வழியாக முன்பதிவு செய்யலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com