தீபாவளி கொண்டாட்டம்: கோவை மண்டலத்தில் 2 நாட்களில் ரூ.78 கோடிக்கு மது விற்பனை!

தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 7-ஆம் தேதி ஒரே நாளில் 42 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.
தீபாவளி கொண்டாட்டம்: கோவை மண்டலத்தில் 2 நாட்களில் ரூ.78 கோடிக்கு மது விற்பனை!
டாஸ்மாக் கடை
Published on: 

கோவை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை மண்டலத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் 78 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

மதுபிரியர்கள் கூட்டம்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது.

666 டாஸ்மாக் கடைகள்

குறிப்பாக, கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 666 டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

42 கோடி ரூபாய்

அதன்படி, தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 7-ஆம் தேதி ஒரே நாளில் 42 கோடி ரூபாய்க்கும், தீபாவளி தினமான நவம்பர் 8-ஆம் தேதி 36 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

78 கோடி ரூபாய்

ஒட்டுமொத்தமாக, தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் கோவை மண்டலத்தில் 78 கோடி ரூபாய்க்கும் மேல் மது விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X