தீபாவளி பண்டிகை: 132 சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே தகவல்

பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் தெற்கு ரெயில்வே பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
தீபாவளி பண்டிகை: 132 சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே தகவல்
Published on: 

சென்னை,

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்தும், பிற நகரங்களில் இருந்தும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் ரெயில் நிலையங்களி லும், ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் தெற்கு ரெயில்வே பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

அதன்படி, பிற ரெயில்வே மண்டலங்களின் 62 சேவைகள் உள் பட மொத்தம் 132 சிறப்பு ரெயில்கள் கடந்த 5-ந் தேதி முதல் இயக்கப்படுகின்றன. சென்னை-மதுரை, திருநெல்வேலி, கன்னி யாகுமரி, ராமேஸ்வரம், திருவனந்தபுரம், மும்பை, பெங்களூரு உள்பட முக்கிய வழித்தடங்களில் இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் 8 முன்பதிவில்லா மெமு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

ரெயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க முக்கிய ரெயில் நிலையங்களில் கூடுதல் பயணச்சீட்டு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. பொதுப்பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் முன்பதிவு செய்யப் பட்ட பெட்டிகளுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் நடைமே டைகளில் பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு பகுதிகள் மூடப்படுகின்றன. பெண்களின் பாதுகாப்புக்காக நீண்ட தூர ரெயில்களில் ஆண், பெண் போலீசார் அடங்கிய பாதுகாப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

X