தீபாவளி பண்டிகை: நீதிமன்றங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வு விடுமுறைக்கு ஈடாக டிசம்பர் 12 ஆம் தேதி செயல்படும் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
Published on: 

தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களுக்கு தீபாவளியையொட்டி நாளை முதல் விடுமுறை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. திங்கட்கிழமை ஏற்கனவே பொது விடுமுறையாக இருக்கும் நிலையில், நாளையும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இனி வரும் 10 ஆம் தேதிதான் நீதிமன்றம் மீண்டும் கூடும்.

நாளை விடப்படும் விடுமுறையை ஈடு செய்ய வரும் 28 ஆம் தேதி மாவட்ட நீதிமன்றங்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வு விடுமுறைக்கு ஈடாக டிசம்பர் 12 ஆம் தேதி செயல்படும் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட ஏதுவாக 9 ஆம் தேதி திங்கள் கிழமை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய நவம்பர் 21, 2026 (சனிக்கிழமை) அனைத்து அரசு அலுவலகங்கள், மின்வாரிய அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் ரேஷன் கடைகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X