தீபாவளி பண்டிகை - பட்டாசுகள் வெடித்து மக்கள் கொண்டாட்டம்.!

தீபாவளி வாணவேடிக்கைகளால் சென்னை மாநகரமே வண்ணமயமாக காட்சியளித்தது.
பட்டாசுகள் வெடித்து மக்கள் கொண்டாட்டம்
Published on: 

சென்னை,

தமிழகம் முழுவதும் வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் தீபாவளிக் கொண்டாட்டம் களைகட்டியது.

இந்தியாவின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீமையை வென்று நன்மை வெற்றி பெற்றதன் அடையாளமாக கொண்டாடப்படும் இந்த ஒளித்திருநாள், தமிழ்நாட்டில் கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாலை முதலே மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து முக்கிய கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில், பழனி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தீபாவளி தினத்தில் லட்சுமி தேவியை வழிபடுவது செல்வ வளத்தை தரும் என்பது ஐதீகம் என்பதால், வீடுகளிலும், கடைகளிலும் லட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது.

இந்தநிலையில், தீபாவளிப் பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்து மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குடும்பம் குடும்பமாக தீபாவளியை மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சிறுவர்கள் மத்தாப்பு, சங்கு சக்கரம் உள்ளிட்ட பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ச்சியில் திளைத்தனர். சென்னையில் கண்ணைக் கவரும் பலவிதமான வாணவேடிக்கைகள் வானை வண்ணமயமாக்கும் வகையில் காட்சியளித்தன. சென்னையில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வந்ததால், பட்டாசு வெப்பத்தால் சற்று குறைந்திருந்தது.

எனினும், மாலை நேரத்தில் மழை விட்டு பெய்தாலும் இல்லாததால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தீபாவளி பண்டிகை இதுவரை 309 பேர் காயம்

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து காயம் அடைந்ததாக 309 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாக தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் காற்றுத் தரக் குறியீட்டு விவரங்கள்

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

தற்போதைய சூழலில் உலகளவில் அதிக மாசடைந்த நகரங்களில் 5-வது இடத்தில் சென்னை உள்ளது.

X