தீபாவளி பண்டிகை: சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்...!

தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை: சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்...!
Published on

சென்னை,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கெண்டாட்டம் களை கட்டியுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையே புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்று வழக்கத்தைவிட மெரினாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த எண்ணிக்கை மெரினான கடற்கரையின் மணல் பரப்பை மறைக்கும் அளவிற்கு காணப்பட்டது. அப்போது கடலில் இறங்கியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மேலும் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் மெரினா கடற்கரையில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com