தீபாவளி பண்டிகை: உங்கள் சொந்த ஊருக்கு செல்ல எந்த பேருந்து நிலையம் செல்ல வேண்டும்?

தீபாவளி பண்டிகையையொட்டி, நாளை (நவம்பர் 5) முதல் 7-ந்தேதி வரை 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகை: உங்கள் சொந்த ஊருக்கு செல்ல எந்த பேருந்து நிலையம் செல்ல வேண்டும்?
Published on: 

சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5.11.2026 முதல் 7.11.2026 சென்னையில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வருகிற 8-ந்தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை காலத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக, கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கூறியுள்ளார்.

இதன்படி நாளை (நவம்பர் 5) முதல் 7-ந்தேதி வரை 15,659 பேருந்துகள் இயக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி விடுமுறை முடித்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சென்னை திரும்ப ஏதுவாக 11,197 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு ஏற்படும் குறைகள் மற்றும் சிரமங்களைக் கண்டறிந்து அவற்றை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் எவ்வித சிரமமுமின்றி பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்ல எந்த பேருந்து நிலையம் செல்ல வேண்டும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி

1. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT). கிளாம்பாக்கம்

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

2. CMDA காலநிலை பூங்கா அருகில் திறந்தவெளி இடம், கிளாம்பாக்கம். (தற்காலிக பேருந்து நிலையம்)

வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

3. மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது

கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

4. புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு

கிழக்கு கடற்கரை (ECF), காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

5. மாதவரம் புதிய பேருந்து நிலையம்

பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.

X