தீபாவளி விடுமுறை: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தாவரவியல் பூங்காவில் 55 வகையான மலர்ச் செடிகளில் பூத்து குழுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
தீபாவளி விடுமுறை: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on: 

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

தீபாவளி

இந்த நிலையில், இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து, பட்டாசு வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

ஊட்டி

தீபாவளி விடுமுறையை கொண்டாட பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில், ஊட்டியில் இன்று அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 55 வகையான மலர்ச் செடிகளில் பல்வேறு வண்ணங்களில் பூத்து குழுங்கும் மலர்களை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

சுற்றலா பயணிகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் குடும்பத்துடன் வந்த சுற்றலா பயணிகள் கண்ணாடி மாளிகை, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றலா தளங்களை பார்வையிட்டு புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா தளங்களில் தீபாவளியை கொண்டாடுவது புதுவித அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.

X