தீபாவளி சீட்டு பணம் விவகாரம்: கணவருடன் தகராறு - கர்ப்பிணி தற்கொலை


தீபாவளி சீட்டு பணம் விவகாரம்: கணவருடன் தகராறு - கர்ப்பிணி தற்கொலை
x

தீபாவளி சீட்டு பணம் விவகாரம் தொடர்பாக கணவருடன் ஏற்பட்ட தகராறில் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சாப்பரானப்பள்ளி கிராமத்தில் வசிப்பவர் கார்த்திக்குமார் (30 வயது), கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. மனைவி உஷா (23 வயது). இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஜெய்வந்த் என்ற ஆண் குழந்தை உள்ளது. தற்போது உஷா 4 மாதம் கர்ப்பிணியாக இருந்தார்.

கார்த்திக்குமார் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். தீபாவளி சீட்டு நஷ்டம் அடைந்ததாக தெரிகிறது. கடந்த தீபாவளிக்கு சீட்டு கட்டியவர்களுக்கு பொருட்கள் வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் தீபாவளி சீட்டு கட்டியவர்கள் கார்த்திக்குமாரிடம் பணம் கேட்டு வந்துள்ளனர். இதுதொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு எற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி சீட்டு பணம் கேட்டு சிலர் கார்த்திக்குமார் வீட்டுக்கு வந்துள்ளனர். இதனால் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த உஷா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் உஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உஷாவுக்கு திருமணம் ஆகி இரண்டரை ஆண்டுகள் மட்டுமே ஆவதால் இந்த சம்பவம் குறித்து ஓசூர் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story