தீபாவளி விற்பனை கடந்த ஆண்டைக்காட்டிலும் 19 சதவீதம் உயர்வு

தங்கம் மற்றும் வெள்ளி விற்பனையும் வழக்கமான அளவில் நடைபெற்றுள்ளது.
தீபாவளி விற்பனை கடந்த ஆண்டைக்காட்டிலும் 19 சதவீதம் உயர்வு
Published on: 

தீபாவளி பண்டிகையில் நாடு முழுவதும் ரூ.7 லட்சம் கோடிக்கு வர்த்தகம் ஆனது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 19 சதவீதம் உயர்வாகும்.

ரூ.7 லட்சம் கோடி

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்ட நிலையில், ஜவுளி, நகை, வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் என மொத்தம் ரூ.7 லட் சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றிருப்பதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு முந்தைய நாளில், பண்டிகை காலத்தில் ரூ.6 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று இந்த அமைப்பு கணித்திருந்தது. தற்போது வெளியாகியுள்ள தகவ லின்படி, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு விற் பனை அளவு 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு

தலைநகர் டெல்லியில் மட்டும் ரூ. 1 லட்சம் கோடிக்கு வணிகம் நடைபெற்றுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் ஜவுளித் துறையில் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. வழக்கமான ஜவுளி மற்றும் தங்க நகைகள் தவிர, பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டதால் வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களின் விற்பனையும் அமோகமாக இருந்தது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை உச்சத்தில் இருந்த நிலையில், பண்டிகையின் போது விலை சற்று குறைந்ததால் தங்கம் மற்றும் வெள்ளி விற்பனையும் வழக்கமான அளவில் நடைபெற்றுள்ளது.

அகல் விளக்குகள் முதல் பட்டாசு வரை

அகல் விளக்குகள், தோரணங்கள் முதல் பட்டாசு, ஆடைகள், நகைகள் மற்றும் வாகனங்கள் வரை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிக்குவித்துள்ளனர். இந்த தீபாவளி வணிகம் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், சிறு வியாபாரிகள், தெருவோர வியாபாரிகள், போக்குவரத்துத்துறை, பாக்கெட் செய்வோர் மற்றும் சிறு உற்பத்தித் துறையினர் எனப் பல தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமைந்தது. கடந்த 2025-ம் ஆண்டு தீபாவளியின் போது ரூ.5.40 லட்சம் கோடிக்கு வணிகமும், ரூ.65 ஆயிரம் கோடிக்கு சேவைகளும் பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

X