

சென்னை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 15,659 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
வருகிற 8-ந்தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை காலத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.
இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக, கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கூறியுள்ளார். நாளை (நவம்பர் 5) முதல் 7-ந்தேதி வரை 15,659 பேருந்துகள் இயக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி விடுமுறை முடித்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சென்னை திரும்ப ஏதுவாக 11,197 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு ஏற்படும் குறைகள் மற்றும் சிரமங்களைக் கண்டறிந்து அவற்றை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் எவ்வித சிரமமுமின்றி பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.