தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு... சென்னையில் இருந்து பஸ்கள் புறப்படும் இடங்கள் விவரம்

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு... சென்னையில் இருந்து பஸ்கள் புறப்படும் இடங்கள் விவரம்
Published on: 

சென்னை,

இந்து மதப்பண்டிகையான தீபாவளி உலகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

இதனிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக சிறப்பு பஸ்களை தமிழக அரசு இயக்கி வருகிறது. அந்த வகையில் சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எந்தெந்த பஸ் நிலையங்களில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பஸ்கள் செல்கின்றன என்ற விவரங்களை இங்கு காண்போம்.

கிளாம்பாக்கம் பஸ் நிலையம்:

திண்டிவனம் மார்க்கமாக விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், திட்டக்குடி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கோயம்புத்தூர் செல்லும் பஸ்கள் கிளம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி செல்லும் பேருந்துகளுக்கும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

CMDA காலநிலை பூங்காவிற்கு அருகில் உள்ள திறந்த வெளி இடம்:

செஞ்சி மார்க்கமாக திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி செல்லும் பஸ்கள் CMDA காலநிலை பூங்காவிற்கு அருகில் உள்ள திறந்த வெளி இடத்தில் இருந்து புறப்படும்.

மறைமலைநகர் தற்காலிக பஸ் நிலையம்:

கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பேராவூரணி, திருவாரூர், ஒரத்தநாடு, மன்னார்குடி, பட்டுக்கோட்டை செல்லும் பஸ்கள் மறைமலைநகர் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

கோயம்பேடு பஸ் நிலையம்:

கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி செல்லும் பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்தில் நிற்கும். காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், பெங்களூர் செல்லும் பஸ்களும், திருத்தணி, திருப்பதி செல்லும் பஸ்களும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

மாதவரம் புதிய பஸ் நிலையம்:

பொன்னேரி, ஊத்துக்கோட்டை, காளஹஸ்தி, திருப்பதி, நெல்லூர் ( ஆந்திரா மாநிலம்) செல்லும் பஸ்களும் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை செல்லும் பஸ்களும் மாதவரத்தில் இருந்து புறப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X