தீபாவளி ஸ்பெஷல்: தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரெயில் - தென்காசி வழியாக இயக்கம்

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (நவ.5) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தீபாவளி ஸ்பெஷல்: தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரெயில் - தென்காசி வழியாக இயக்கம்
சிறப்பு ரெயில்
Published on: 

சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி, தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரெயில் தென்காசி வழியாக இயக்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நவம்பர் 6-ந் தேதி

தாம்பரத்தில் இருந்து நவம்பர் 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06111) மறுநாள் காலை 9.20 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 9-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06112) மறுநாள் காலை 9 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது.

சிறப்பு ரெயில்

20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, புதுக்கோடடை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

முன்பதிவு

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (நவ.5) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X