தேமுதிக 2.0 தொடங்குகிறது - விஜயபிரபாகரன் பேச்சு

'கேப்டன் விட்டுச் சென்ற பணிகளை நாங்கள் செய்வோம்' என விஜயபிரபாகரன் பேசினார்.
சென்னை,
விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன், படைத்தலைவன் என்ற திரைப்படத்தின் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் அன்பு இயக்கியுள்ளார். இளையராஜா இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சண்முக பாண்டியனின் சகோதரரும், தேமுதிக இளைஞர் அணி செயலாளருமான விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது;
"தேமுதிக 2.0 தொடங்குகிறது. கேப்டன் விட்டுச் சென்ற பணிகளை நாங்கள் செய்வோம். அது சினிமாவாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி. விஜயகாந்தை போல சண்முக பாண்டியனும் உங்கள் சொத்துதான். நான் தான் அப்பாவுக்கு முதல் ரசிகன். இப்போது சன்முகபாண்டியனுக்கும் நானே முதல் ரசிகன்" என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story






