

சிவகங்கை,
கீழடி அகழாய்வு முகாமை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா நேரில் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த் கூறியதாவது:- தமிழகத்தில் ஆட்சி கலைந்து விரைவில் பொதுத்தேர்தல் வரும்; தமிழகத்தில் பாரதிய ஜனதா காலூன்ற முடியாது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி அரசியலுக்கு வருவதால் தேமுதிகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.