விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 18ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்
Published on

சென்னை,

உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்த வதந்திகள் பரவிவந்த நிலையில், விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார் என்றும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, மார்பு சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக்கருவியுடன் விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் விஜயகாந்திற்கு பொறுத்தப்பட்ட செயற்கை சுவாசக்கருவி அகற்றப்பட்டுள்ளதாகவும், அவர் இயற்கையாக சுவாசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com