தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா

தூத்துக்குடியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
Published on

தூத்துக்குடியில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை, சேர்வைக்காரன்மடம், மாப்பிள்ளையூரணி, ஆசைத்தம்பி நகர் ஆகிய இடங்களில் கொடி ஏற்றி, கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட மாநில அளவில் சிலம்பம், கராத்தே, தடகள போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட துணை செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் புதுக்கோட்டை அதிசயராஜ், மாவட்ட மீனவர்அணி செயலாளர் முனியசாமி, ஒன்றிய துணை செயலாளர் விஜி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முல்லைகண்ணன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி செயலாளர் முத்துக்குமார், பொது குழு உறுப்பினர் ராஜமுகம்மது, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் மாரி, தொண்டரணி அருண்குமார், பெரியசாமி, அந்தோணி, பரமசிவம், அன்பழகன், முத்து, அய்யனார், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com