தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
Published on

காரியாபட்டி, 

காரியாபட்டி கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள் சார்பிலும், காரியாபட்டி நகர கழகம் சார்பிலும் தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காரியாபட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் துலுக்கன்குளம் கிராமத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. காரியாபட்டி நகர கழகம் சார்பில் சமுதாய கூடத்தில் பேரூராட்சி தலைவர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. காரியாபட்டி கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் செல்லம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ராஜா சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்வது, தி.மு.க.விற்கு புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி பேசுகையில், காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்தில் எந்த கிளைக் கழகம் அதிகமான உறுப்பினர்களை சேர்க்கிறார்களோ அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ. 7 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். உறுப்பினர்களை அதிகம் சேர்க்கும் நபர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, முடுக்கன்குளம் தி.மு.க. பிரமுகர் வாலை முத்துச்சாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com