

இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கூடுதலாக 200 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் பிளாண்ட் அமைக்கப்பட்டு உள்ளது. அதை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கடந்த 72 மணி நேரத்தில் 200 கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில் 28 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. முதல்-அமைச்சர் உத்தரவுப்படி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் ஆஸ்பத்திரிகள் தயார் நிலையில் உள்ளன.
தேர்தல் வாக்குறுதி
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். அந்த வகையில், ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைபடி, கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு மற்றும் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்க ளில் முன்னாள் அமைச்சர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவர்கள் காட்டிய சொத்து மதிப்புகளுக்கு இடையே உள்ள பெரிய வித்தியாசம் எப்படி வந்தது?. கோவையில் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கலெக்டர் சமீரன், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் ரவீந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.