தி.மு.க. முகவர்கள் ஆலோசனை கூட்டம்

அம்பையில் தி.மு.க. முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தி.மு.க. முகவர்கள் ஆலோசனை கூட்டம்
Published on

அம்பை:

அம்பாசமுத்திரம் ஒன்றிய, நகர தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் அம்பை ராம் மஹாலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினரும் அம்பை நகர செயலாளருமான கே.கே.சி.பிரபாகரன், அம்பை ஒன்றிய செயலாளர் பரணி சேகர், மாவட்ட துணைச் செயலாளர் மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் சிவராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாக முகவர்களின் பணிகள் தொடர்பாக ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com