

ராமநாதபுரம்,
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களில்.. திமுக, அதிமுக இடையே இரண்டாவது இடத்திற்காக போட்டியிடுகிறது என அமைச்சர் டி.கே. பிரபு கூறியுள்ளார்.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுடன் அமைச்சர் பிரபு பேசியதாவது, "மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றிபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி, இரண்டாமிடத்துக்காக. முதல்-அமைச்சர் விஜய் மீது மக்கள் வைத்துள்ள அளவுகடந்த அன்புதான், வாக்குகளாக மாறிக் கொண்டிருக்கிறது. இன்னும் சிறிதுநேரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை தவெக பெறவிருக்கிறது என்றார்,
இடைத்தேர்தல் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேலும் சத்தியபாமாவும் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகின்றனர்.